தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் பரவல் தற்போது மீண்டும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது.
தமிழகத்திலும் கடந்த 2 வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக சுகாதார துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவையில் 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story