தமிழகத்தில் தேமுதிக தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது - பிரேமலதா விஜயகாந்த்


தமிழகத்தில் தேமுதிக தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது -  பிரேமலதா விஜயகாந்த்
x

தமிழகத்தில் தேமுதிக தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாமி தரிசனம் செய்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் தேமுதிக தான் எதிர்கட்சியகா விளங்கி வருகின்றன. ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றுணைந்து அணி அமைத்துள்ளனர்.

பொறுந்திருந்து பார்ப்போம், எதிர்கட்சி அணி வெற்றி பெறுமா என இப்போது சொல்ல முடியாது. விசாரணை கைதிகளாக அழைத்து செல்லபடும் கைதிகள் ஜெயலில் கொல்லபடுவது தற்போது அதிகமாக பார்த்து வருகின்றோம்.

சட்டம் ஒழுங்கு கேள்விகுறியாக உள்ளன. கொலை கொள்ளை நடந்தேறி வருகின்றன. இதனை தடுக்க வேண்டும். ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல்துறை சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story