தமிழகத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

தமிழகத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 2 பேர் உள்பட மொத்தம் 5 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. நெல்லை, திருச்சி, மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட 33 மாவட்டங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. கொரோனா பதிப்பில் இருந்து இன்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 58 பேர் தற்போது வரை கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story