தமிழகத்தில்2 கோடியே 30 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு;அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்


தமிழகத்தில்2 கோடியே 30 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு;அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
x

தமிழகத்தில் 2 கோடியே 30 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினாா்.

ஈரோடு

ஈரோடு அசோகபுரம் பகுதியில் கிழக்கு தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. மின் இணைப்பை ஆதாருடன் இணைத்ததில் எந்தவித குளறுபடியும் இல்லை. தமிழகத்தில் 2 கோடியே 30 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 12 லட்சம் இணைப்புகளையும், ஆதாருடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாகவும், கைத்தறிக்கு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் இதுகுறித்த அரசாணை வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.


Next Story