தஞ்சையில், முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


தஞ்சையில் ரம்ஜான் பண்டிகையை யொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் ரம்ஜான் பண்டிகையை யொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

ரம்ஜான் பண்டிகை

ரம்ஜான் நோன்பு என்பது முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று. ஆண்டுதோறும் முஸ்லிம்கள் கடைபிடித்து வரும் ரம்ஜான் நோன்பு கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி தொடங்கியது. நோன்பு காலத்தில் 5 வேளை முஸ்லிம்கள் தொழுகை செய்தனர். இந்த ரம்ஜான் நோன்பு முடிந்ததன் நிறைவாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு முடிந்து ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

முஸ்லிம்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை யொட்டி பள்ளிவாசல்களில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

சிறப்பு தொழுகை

தஞ்சை புதுஆற்றுப்பாலம் அருகே உள்ள ஜூம்மா பள்ளிவாசலில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதே போல் தஞ்சை வடக்கு வாசல் ஜீனத்பள்ளிவாசல், மருத்துவகல்லூரி சாலை ரகுமான்நகர் பள்ளிவாசல், பாம்பாட்டி தெரு பள்ளிவாசல், விசிறிக்காரத்தெரு பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.

இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவியும், கைகுலுக்கியும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

பெண்கள் தொழுகை

தஞ்சை கீழவாசலில் உள்ள அண்ணா திருமண மண்டப வளாகத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி தஞ்சை மாநகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாநகர தலைவர் அப்துல்லா தலைமையில் செயலாளர் ஜியாபுதீன், பொருளாளர் சலீம், மாவட்ட மாணவரணி செயலாளர் யாசர்அராபத், நிர்வாகிகள் முகமது முஸ்தபா, காலித், செய்து முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் இந்த சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்த சிறப்பு தொழுகையில் ஏராளான பெண்களும் கலந்து கொண்டனர். சிறப்பு தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.


Next Story