தஞ்சையில், இடியுடன் மழை


தஞ்சையில், இடியுடன் மழை
x

தஞ்சையில், இடியுடன் மழை

தஞ்சாவூர்

தஞ்சையில் இடியுடன் மழை பெய்தது.

மழை

தஞ்சை மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கிய நாள் முதல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அக்னி நட்சத்திர காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக தான் இருக்கிறது. இதனால் பகல் நேரத்தில் வெளியே செல்வதற்கே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு திடீரென சிறிதுநேரம் மழை பெய்தது.தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை முதல் பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ஆனால் தஞ்சை மாநகரில் திடீரென இரவு 8.45 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறிதுநேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. பலத்த மழையாக பெய்யவில்லை என்றாலும் சராசரியாக பெய்து கொண்டே இருந்தது.

குறுவை சாகுபடி

1½ மணிநேரத்திற்கு மேல் இந்த மழை நீடித்தது. அவ்வப்போது இடி இடித்ததுடன் பளிச், பளிச்சென மின்னலும் வெட்டி கொண்டிருந்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே தஞ்சை தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதியில் வடிகால் மீதுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதால் வடிகால் முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நின்றது.

நேற்று பெய்த மழையின் காரணமாக கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீதிகளில் ஓடியது. இதனால் வாகனங்களில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் பூமி நனைந்து குளிர்ந்த காற்று வீசியது. குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளும், குறுவை சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகளும் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாஞ்சிக்கோட்டை

இதேபோல் நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் நாஞ்சிக்கோட்டை சாலையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.


Related Tags :
Next Story