தட்கல் சிறப்பு திட்டத்தில்திருச்செந்தூர் பகுதி விவசாயிகள் மின்இணைப்பு பெறலாம்:அதிகாரி தகவல்


தட்கல் சிறப்பு திட்டத்தில்திருச்செந்தூர் பகுதி விவசாயிகள் மின்இணைப்பு பெறலாம்:அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தட்கல் சிறப்பு திட்டத்தில் திருச்செந்தூர் பகுதி விவசாயிகள் மின்இணைப்பு பெறலாம் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோட்ட மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடைமுறை படுத்தப்பட்டு, விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, சிறப்பு தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாயமின் இணைப்புகள் வழங்கப்படும்.

எனவே ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விவசாயிகள், இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற என்னை(திருச்செந்தூர் மின்விநியோக செயற்பொறியாளரை) தொடர்பு கொள்ள வேண்டும் என ெதரிவித்துள்ளார


Next Story