தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் சேவாதளம் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேவாதள மாநகர் மாவட்ட தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் தெட்சிணாமூர்த்தி, மாநில செயலாளர் ஜெயசூரியன், தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர்கலந்து கொண்டனர்.


Next Story