தஞ்சையில், குழாய் பொருத்திய மண்பானை விற்பனை மும்முரம்


கோடைகாலத்தை முன்னிட்டு தஞ்சையில் குழாய் பொருத்திய மண்பானை விற்பனை சூடுபிடித்துள்ளது. பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்

தஞ்சாவூர்


கோடைகாலத்தை முன்னிட்டு தஞ்சையில் குழாய் பொருத்திய மண்பானை விற்பனை சூடுபிடித்துள்ளது. பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்

வெயிலின் தாக்கம்

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தஞ்சையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலை சாமாளிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனமும் குளிர்பானங்கள், பழஜூஸ், கரும்புச்சாறு, பதநீர், இளநீர் போன்றவற்றின் மீது திரும்பி உள்ளது.

அதே போல இயற்கை முறையில் குடிநீரை குளிர்விக்கும் மண்பானை மீதும் பொதுமக்கள் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர்.இதன்காரணமாக தற்போது தஞ்சை பகுதிகளில் மண்பானை விற்பனையும் அதிகரித்து வருகிறது.

குழாய் பொருத்திய மண்பானை

இதனால் முக்கிய வீதிகளிலும், சாலையோரங்களிலும் புதிதாக மண்பானை கடைகள் முளைத்திருக்கின்றன. தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையோரத்தில் குழாய் பொருத்திய மண்பானைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த வகை மண்பானைகள் ரூ.250 முதல் ரூ.650 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

தீங்கு வராதது

இதுகுறித்து மண்பானை வியாபாரி ஒருவர் கூறுகையில்:- வெயிலை சாமாளிக்க பொதுமக்கள் மண்பானை தண்ணீரை அதிகளவில் அருந்துகின்றன. இதனால் மக்களிடம் மண்பானையின் தேவை அதிகரித்து விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மேலும், மண்பானையில் வைத்து தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு எந்த தீங்கும் வராது.பொதுமக்களிடம் அதிக வரவேற்பு இருப்பதால் மண்ணால் செய்யப்பட்ட டம்ளர் மற்றும் தண்ணீர் பாட்டில்களும் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றையும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.


Next Story