ஆண்டிப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி


ஆண்டிப்பட்டியில்   திடக்கழிவு மேலாண்மை பயிற்சி
x

ஆண்டிப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி நடந்தது

தேனி

தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கும் 23 பேரூராட்சிகளில் ஆண்டிப்பட்டி பேரூராட்சியும் ஒன்றாகும். இங்கு தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மூலம் உரங்களும், மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மையை இதர பேரூராட்சியிலும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேரூராட்சி அலுவலர்கள் ஆண்டிப்பட்டிக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பேரூராட்சி அலுவலர்கள் ஆண்டிப்பட்டிக்கு இன்று வந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட்டனர். அவர்களுக்கு ஆண்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா, செயல் அலுவலர் சின்னசாமிபாண்டியன், சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்படும் விதம் குறித்து விளக்கி கூறினர். இந்த பயிற்சி முகாமில் 10 பேரூராட்சிகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story