பெண் ஓட்டிச்சென்ற ஆட்டோவில்கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது


ராஜபாளையத்தில் பெண் ஓட்டிச்சென்ற ஆட்டோவில் கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது

விருதுநகர்

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு அனு என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சுப்புலட்சுமி 2-வதாக கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுப்புலட்சுமிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அவரது வீட்டின் அருகே வசித்து வரும் பெண் ஆட்டோ டிரைவரான தனலட்சுமியின் ஆட்டோவில், ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

ராஜபாளையம் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் சென்ற போது, சுப்புலட்சுமிக்கு ஆட்டோவிேலயே பிரசவமாகி ஆண் குழந்தை பிறந்தது. உடனே அங்கிருந்த அரசு செவிலியர்கள் விரைந்து வந்து தாயையும், குழந்தையும் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றனர் தாய்-சேய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, இருவரும் நலமுடன் இருப்பதாக அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் மாரியப்பன் கூறினார்.

1 More update

Next Story