பர்கூர் மலைப்பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை


பர்கூர் மலைப்பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2023 2:58 AM IST (Updated: 21 Oct 2023 2:59 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் மலைப்பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் ஊராட்சிக்குட்பட்டது மேற்கு மலைப்பகுதி. இங்குள்ள தாளக்கரை பிரிவில் இருந்து ஒன்னக்கரை பிரிவு வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தற்போது இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்லவும், நடந்து செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளது. மலைவாழ் மக்களின் நலன் கருதி பழுதடைந்த தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story