தொடர் கஞ்சா விற்ற வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம்
தொடர்ந்து கஞ்சா விற்ற வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தொடர் கஞ்சா விற்பனை
திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு போலீசார் திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது கஞ்சா விற்பனை செய்த திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ராமலிங்கபுரம் காமராஜர் தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 36) என்பவரை கைது செய்தனர். இவர் ஏற்கனவே திருவலங்காடு, ஆவடி போலீசாரால் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யபட்டிருந்தார். இதையடுத்து திருவாலங்காடு போலீசார் சுரேஷை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
அதேபோல கனகம்மாசத்திரம் போலீசார் தேனி மாவட்டம், அல்லிநகரம் கோட்டைகளம் தெருவை சேர்ந்த சுரேஷ் என்கின்ற சுரேஷ்பாண்டியன் (35) என்பவரை கஞ்சா விற்றதாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம்
இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் சுரேஷ் என்கின்ற சுரேஷ்பாண்டியன், சுரேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் மேற்கண்ட 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான ஆணையை போலீசார் சென்னை புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.