தேர் திருவிழாவில் மாட்டுவண்டி சக்கரம் முறிந்ததால் பரபரப்பு
மல்லாபுரத்தில் தேர் திருவிழாவில் மாட்டுவண்டி சக்கரம் முறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மல்லாபுரத்தில் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று தேர் திருவிழா நடந்தது.
அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரை, மாட்டு வண்டியின் மீது வைத்து பக்தர்கள் இழுத்து சென்றனர். கோவிலில் இருந்து சிறிது தூரம் தேர் சென்ற நிலையில், திடீரென மாட்டுவண்டியின் சக்கரம் உடைந்தது. உடன் தேரை சாயவிடாமல் பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாட்டுவண்டியுடன் சேர்த்து பிடித்துக்கொண்டனர்.
இதனிடையே அங்கு வந்த வட பொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், பாதுகாப்பு கருதி தேரை தொடர்ந்து இழுக்க வேண்டாம் என்று அறிவுறுத்ததையடுத்து தேர் இழுக்காமல் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story