கடலூர் முதுநகரில் இருதரப்பினர் மோதல்; கவுன்சிலரின் கணவர் உள்பட 14 பேர் மீது வழக்கு
கடலூர் முதுநகரில் இருதரப்பினர் மோதல் தொடா்பாக கவுன்சிலரின் கணவர் உள்பட 14 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
கடலூர்
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் சுனாமி நகர் பகுதியை சேர்ந்தவர் பக்கிரி மனைவி உஷா. இவர் தனது வீட்டின் அருகே உள்ள புறம்போக்கு இடத்தில் வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை கடலூர் மாநகராட்சி 36-வது வார்டு கவுன்சிலர் ராஜலட்சுமியின் கணவர் சங்கரதாஸ் அகற்றியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் கோஷ்டியாக மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கரதாஸ் மற்றும் உஷா ஆகியோர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன் பேரில் இருதரப்பை சேர்ந்த கவியரசன், பக்கிரி, குப்புராஜ், வினோ, சங்கரதாஸ், வெள்ளையன், கபிலன், சந்துரு உள்ளிட்ட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story