மினி லாரி மோதியதில் டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்த உயர்கோபுர மின்விளக்கு


மினி லாரி மோதியதில்  டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்த உயர்கோபுர மின்விளக்கு
x

மினி லாரி மோதியதில் உயர்கோபுர மின்விளக்கு டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்தது.

தேனி

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் அபினேஷ் (வயது 26). மினி லாரி டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் ராகுல் (20). லாரி கிளீனர். இவர்கள் 2 பேரும், நேற்று இரவு கம்பத்தில் இருந்து மினி லாரியில் வாழைத்தார்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில், மந்தை வாய்க்கால் பாலம் அருகே வந்தபோது திடீரென மினிலாரி நிலைதடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த உயர்கோபுர மின்விளக்கு மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் உயர்கோபுர மின்விளக்கு உடைந்து, அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்தது. இதில் லாரி டிரைவர் அபினேஷ், கிளீனர் ராகுல் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயர்கோபுர மின்விளக்கு சாலையின் குறுக்கே உடைந்து விழுந்ததால் வாகனங்கள் ஒருவழிபாதையில் சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story