வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்கோபி ஆர்ப்பாட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேச்சு


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்கோபி ஆர்ப்பாட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேச்சு
x

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கோபி ஆர்ப்பாட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசினாா்

ஈரோடு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என கோபியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஆர்ப்பாட்டம்

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சாராயம் குடித்ததால் 22 பேர் சாவு மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தி.மு.க. தவறிவிட்டது என குற்றம்சாட்டி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மே 29-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள ஜியான் தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்டம் ஒழுங்கு

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்ட ஒழுங்கு சரியில்லாமல் போய்விடுகிறது. கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றதால் அதை குடித்த 22 பேர் உயிரிழந்தனர். இந்த ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் பல சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டன. கோபியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலில்...

அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பவர்கள் தான் அ.தி.மு.க. தொண்டர்கள். அ.தி.மு.க.வில் 2 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். இதேபோல் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பு ஏற்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில் பவானிசாகர் தொகுதி பண்ணாரி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரமணிதரன், ஈஸ்வரன், கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், ஒன்றிய செயலாளர்கள் குறிஞ்சிநாதன், தம்பி சுப்பிரமணியம், வேலுமணி, கூட்டுறவு சங்க தலைவர் முத்துசாமி, ஒன்றியக்குழு தலைவர் மவுத்தீஸ்வரன், கோபி நகராட்சி கவுன்சிலர் முத்துரமணன் மற்றும் கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story