போடியில் அழுகிய நிலையில் பெண் பிணம்


போடியில்  அழுகிய நிலையில் பெண் பிணம்
x

போடியில் 30 வயது மதி்க்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்

தேனி

போடி முந்தல் சாலையில் ஆண்டி ஓடை என்ற இடத்தில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அடியில் 30 வயது மதி்க்கத்தக்க பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் குரங்கணி போலீசாருக்கு தகவல் ெகாடுத்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் ே்டாங்கரே, போடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோரும் அங்கு வந்தனர். பின்னர் சம்பவ இடத்தை பார்வையிட்டு‌ ஆய்வு செய்தனர். இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலத்துக்கு அடியில் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story