மாவட்டத்தில்மேலும் 2 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில்மேலும் 2 பேருக்கு கொரோனா
x

மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 56 பேருக்கு பரிசோதனை செய்ததில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 700 ஆக உயர்ந்தது. இதற்கிடையில் நேற்று 3 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 952 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 734 பேர் இறந்துள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 14 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Related Tags :
Next Story