வீட்டில் தீப்பற்றியதில் பொருட்கள் எரிந்து நாசம்


வீட்டில் தீப்பற்றியதில் பொருட்கள் எரிந்து நாசம்
x

வீட்டில் தீப்பற்றியதில் பொருட்கள் எரிந்து நாசமானது.

திருச்சி

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தை அடுத்த முடுக்குப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 50). கூலித் தொழிலாளி. இவரது குடிசை வீட்டின் அருகே அவரது மனைவி விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அடுப்பில் இருந்து தீப்பொறி பறந்து குடிசை வீட்டின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் குடிசை தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்ததோடு, இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இருப்பினும் குடிசை முற்றிலும் எரிந்ததுடன், அதில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறையினர் மற்றும் புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story