கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தில் 33¼ கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர் - அமைச்சர் மூர்த்தி பேச்சு


கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தில் 33¼ கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
x

தமிழகத்தில் கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் 33¼ கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை


தமிழகத்தில் கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் 33¼ கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

டிரைவர், கண்டக்டர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மதுரை புதூர் பணிமனையில் டிரைவர், கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் மூர்த்தி குத்து விளக்கு ஏற்றி ஓய்வறையை திறந்து வைத்தார். வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. தளபதி வரவேற்று பேசினார். அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா.

விழாவில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.145.57 கோடி ஓய்வு கால பணப்பலன்கள் மற்றும் விபத்தில்லாமல் பணியாற்றிய டிரைவர், கண்டக்டர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இலவச பஸ் பயண திட்டம்

விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசும் போது கூறியதாவது:-

கிராமப்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1972-ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்தை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சி காலத்தில் அதிக அளவில் அரசு பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. பஸ் வசதி இல்லாத பகுதிக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு பஸ்கள் விடப்பட்டன.

தமிழகத்தில் கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் கீழ் இதுவரை 33 கோடியே 38 லட்சம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர். கட்டணமில்லா பஸ்சில் சராசரியாக ஒரு நாளைக்கு 5 லட்சத்து 56 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். மதுரைக்கு 251 மாசு இல்லாத பஸ்கள் மற்றும் 100 மின்சார பஸ்கள் கொள்முதல் செய்ய திட்டம் உள்ளது.

மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தால் அவர்களது பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


Next Story