வால்பாறை மலைவாழ் கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம்


வால்பாறை மலைவாழ் கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம்
x

வால்பாறையில் மலைவாழ் கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் மலைவாழ் கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கொரோனா பரவல் அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வால்பாறை பகுதியில் உள்ள வால்பாறை, முடீஸ் சோலையாறு நகர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் அனைத்து மலைவாழ் கிராமங்களிலும் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

வால்பாறை வில்லோணி எஸ்டேட் வனப் பகுதியில் உள்ள நெடுங்குன்று மலைவாழ் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிவையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாபுலட்சுமண் தலைமையில் மருத்துவ பணியாளர்கள் கிராம சுகாதார செவிலியர், இல்லம் தேடி மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் இணைந்து கொரோனா விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமை நடத்தினார்கள்.

சளி, காய்ச்சல், இருமல்

மலைவாழ் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று காய்ச்சல் பரிசோதனை, சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிந்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் வெளியிடங்களுக்கு சென்று வருபவர்கள் வந்ததும் உடல்நிலையில் மாற்றம் சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

காய்ச்சி கொதிக்க வைத்து தண்ணீரை குடிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிக்கு அருகில் தண்ணீர் தேங்கி நிற்பதை தவிர்க்க வேண்டும். கொசுக்கள் பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுரை வழங்கி மருந்து மாத்திரைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கினார்கள்.


Next Story