மாணவர்களின் நலன் கருதி குளத்தூர் பகுதி கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்:கலெக்டருக்கு கோரிக்கை


மாணவர்களின் நலன் கருதி குளத்தூர் பகுதி கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்:கலெக்டருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் நலன் கருதி குளத்தூர் பகுதி கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரமா மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில், குளத்தூர் அருகே உள்ள வீரபாண்டியாபுரம், சுப்பையாபுரம், முத்துராமலிங்கபுரம் ஆகிய ஊர்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு வந்து படிக்கின்றனர். அந்த மாணவர்கள் அவர்களின் ஊரில் இருந்து பள்ளிக்கூடத்துக்கு வருவதற்கு போதிய பஸ் வசதி இல்லாததால் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. ஆகையால் மாணவர்களின் நலன் கருதி மேற்கண்ட கிராமங்கள் வழியாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போன்று தூத்துக்குடி-சுப்பிரமணியபுரம் வந்து செல்லக்கூடிய 53 இ தடம் எண் கொண்ட அரசு டவுன் பஸ் தினமும் முறையாக வருவது இல்லை. அதே போன்று மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் குறித்த நேரத்திலும் வருவது இல்லை. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு நடந்தே சென்று வருகின்றனர். ஆகையால் அந்த பஸ்சையும் முறையாக இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.


Next Story