கனியாமூர் கலவரத்தில் பள்ளி பஸ்சை ஓட்டி மற்றொரு பஸ்சை இடித்து சேதப்படுத்தியவர் கைது


கனியாமூர் கலவரத்தில்  பள்ளி பஸ்சை ஓட்டி மற்றொரு பஸ்சை இடித்து சேதப்படுத்தியவர் கைது
x

கனியாமூர் கலவரத்தில் பள்ளி பஸ்சை ஓட்டி மற்றொருபஸ்சை இடித்து சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளி சொத்துக்கள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்ததோடு, போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்திற்கு தூண்டியவர்கள் மற்றும் கலவரத்தில் கலந்து கொண்டு பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியவர்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் பள்ளி கலவரத்தில் பள்ளி பேருந்தை ஓட்டி மற்றொரு பள்ளி பேருந்தை இடித்து சேதப்படுத்தியதாக சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வளையமாதேவி கிராமம் இந்திரா நகரை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சிவா என்கிற வினோத் (வயது 23) என்பவரை வீடியோ ஆதாரங்கள் வைத்து கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1 More update

Next Story