கர்நாடகா சட்டமன்ற தேர்தலில்காங்கிரஸ் வெற்றிக்கு எம்.எல்.ஏ. வாழ்த்து


கர்நாடகா சட்டமன்ற தேர்தலில்காங்கிரஸ் வெற்றிக்கு எம்.எல்.ஏ. வாழ்த்து
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

ஏரல்:

ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரின் முயற்சியினால் 136 இடங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலின் போது என்னை ஹொன்னாலி தொகுதியில் தேர்தல் பொறுப்பாளராக நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டிருந்தது. அதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது இந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சந்தனா கவுடா 17ஆயிரத்து 443 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என்னுடன் இணைந்து கர்நாடகாவில் ஹொன்னாலி தொகுதியில் தேர்தல் பணி செய்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என அவர் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு காங்கிரசார் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.சி. எஸ்.டி. மாநில துணை தலைவர் ஏ. மாரிமுத்து தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் துரைராஜ், ஜோஸ்வா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story