குப்பை கிடங்கில் தீ வைத்து எரிப்பதை தடுக்க கண்காணிப்பு கேமரா : கூடலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்


குப்பை கிடங்கில் தீ வைத்து எரிப்பதை தடுக்க கண்காணிப்பு கேமரா : கூடலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 30 Jun 2023 6:45 PM GMT (Updated: 1 July 2023 12:03 PM GMT)

குப்பை கிடங்கில் தீ வைத்து எரிப்பதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று கூடலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேனி

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமை தாங்கினார். ஆணையர் காஞ்சனா' முன்னிலை வகித்தார். துணை தலைவர் காஞ்சனா சிவமூர்த்தி, உறுப்பினர்கள் ராணி, லோகந்துரை, சிலம்பரசன், தேன்மொழி, காசிமாயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பெத்துக்குளம் நகராட்சி உரக்கிடங்கில் சமூக விரோத செயல்கள் மற்றும் குப்பைகளில் தீ வைத்து எரிப்பதை தடுக்க, முள்வேலி கதவு அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு பொது சமையல் கூடம் கட்டுதல் என்பன உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசும்போது, தண்ணீர் திறந்துவிடும் வால்வுகளில் மூடிகள் உடைந்து உள்ளது. இதனால் மழை நீர், கழிவுநீர் புகுவதால் குடிநீர் மாசுபடுகிறது. இதை தடுக்க வேண்டும். லோயர்கேம்பில் பழுதான குடிநீர் குழாய் மின்மோட்டாரை சரி செய்ய வேண்டும்.

வார்டு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக சாக்கடை கால்வாயில் கழிவுகள் அகற்றுப்படாமல் உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் திட்டக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தினகரனுக்கு, தலைவர் பத்மாவதி லோகந்துரை சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். கூட்டத்தில் சுகாதார அலுவலர் விவேக், மேலாளர் ஜெயந்தி, வருவாய் அலுவலர் அய்யப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story