தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று 109- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று 109 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 27 பேர் உள்பட 27 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 10-க்கும் மேல் பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 227 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 973 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 191 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.