பொள்ளாச்சியில் கடந்த 3 மாதத்தில் விபத்துகளில் 40 பேர் உயிரிழப்பு- போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க அறிவுரை
பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த 3 மாதத்தில் நடந்த விபத்துக ளில் 40 பேர் உயிரிழந்தனர். எனவே போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த 3 மாதத்தில் நடந்த விபத்துக ளில் 40 பேர் உயிரிழந்தனர். எனவே போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
போக்குவரத்து விழிப்புணர்வு
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, நெகமம் பகுதிக ளில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனைமலை அருகே நடந்த விபத்தில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவ லகத்திற்கு வருபவர்களிடம் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
3 மாதத்தில் 40 பேர் உயிரிழப்பு
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் கடந்த 3 மாதத்தில் 34 விபத்துக்கள் நடந்து உள்ளன. இதில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர். 114 பேர் காயமடைந்து உள்ளனர். எனவே பெற்றோர்கள் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை வாகனங்கள் இயக்க அனுமதிக்க கூடாது. அனுபவம் இல்லாதவர்களுக்கு அதிக குதிரை திறன் கொண்ட வாகனங்களை வாங்கி கொடுக்க கூடாது.
அதிக குதிரை திறன் கொண்ட வாகனங்களை அதிவேகமாக ஓட்டி சென்று மற்ற வாகனங்களில் மோதுவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டு வதால் தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
உயிர் சேதம்
விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் அதிகளவு விபத்துகள் ஏற்படுகின்றன. இருசக்கர வாகனத்தில் குழந்தைகள், பெண்களை பின்னால் உட்கார வைத்து செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்.
செல்போன் பேசிக் கொண்டு, குடிபோதையில் மற்றும் அதிக வேகமாக வாகனங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து வாகனங்க ளை இயக்க வேண்டும். அப்போது விபத்து மற்றும் அதனால் உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.