கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது;கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு


கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது;கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு
x

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கான்கிரீட் தளம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் சிலர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று கோரிக்கை மனு கொடுக்க வந்தார்கள். அவர்கள் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில கவுரவ தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது:-

கீழ்பவானி வாய்க்கால் மண்ணால் அமைக்கப்பட்டது. எனவே வாய்க்காலை சீரமைக்க மண்ணை பயன்படுத்த வேண்டும்.இந்த வாய்க்கால் மூலமாக 2 லட்சத்து 7 ஆயிம் ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 2 போகத்துக்கு ஒரு லட்சம் ஏக்கர் நிலம் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளமும், கரையும் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும்.

பராமரிப்பு பணி

கசிவு நீர் மூலம் பாசனம் பெற்று வரும் ஒரு லட்சம் ஏக்கர் நிலமும் பாலைவனமாக மாறிவிடும். நவீனமயமாக்கல் என்ற பெயரில் கான்கிரீட் தளம், கரை அமைக்கப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும். இந்த திட்டத்துக்காக மாற்றி அமைக்கப்பட்ட புதிய திட்டத்தையும் கைவிட வேண்டும்.

விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் இந்த திட்டத்தை முற்றிலுமாக கைவிட்டு பராமரிப்பு பணியை மட்டுமே கீழ்பவானி வாய்க்காலில் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story