தூத்துக்குடியில் ரோட்டின் நடுவில் திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தூத்துக்குடியில் ரோட்டின் நடுவில்  திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் ரோட்டின் நடுவில் திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சாலை பணிகள், கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால், பூங்கா சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அதே போன்று பெரும்பாலான தெருக்களில் தார் சாலைகள் அமைக்கும் பணியும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் அருகே உள்ள சந்திவிநாயகர் கோவில் தெருவில் 4 ரோடுகள் சந்திக்கும் இடத்தில் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இந்த பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளியும் அமைந்து உள்ளது. இந்த கால்வாயில் இரவு நேரங்களில் மக்கள் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆகையால் கழிவுநீர் கால்வாயை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story