ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது


ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலையில்   4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது
x

ஓய்வுபெற் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை

சோழவந்தான்

ஓய்வுபெற் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

குத்திக்கொலை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமுத்து (வயது 65). இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேனூர் கிராமத்தில் தண்டல்காரராகவும் இருந்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 6-ந்தேதி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதில் கலந்து கொண்ட அவர் பின்னர் வைகை ஆற்றுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது போதை ஆசாமிகள் சிலர் அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். ஆனால் அவர் தர மறுத்தார். இதையடுத்து, ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்தஅவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதிமுத்து பரிதாபமாக இறந்தார்.

5 பேர் கைது

இந்த கொலை சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஜோதிமுத்துவை கொலை செய்த மர்ம கும்பலை தேடி வந்தனர். நேற்று சோழவந்தான் விதைப்பண்ணை அருகில் கொலையில் தொடர்பு உடையவர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரபிக்முகமது மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.

பின்னர் அங்கு பதுங்கியிருந்த மர்ம கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இவர்களை விசாரணை செய்தபோது, ஜோதிமுத்துவிடம் வழிப்பறி செய்ய முயன்றவர்கள் என தெரியவந்தது. மேலும் இவர்கள் சோழவந்தான் பேட்டை பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் மற்றும் ெரயில்வே பீடர் ரோடு சேர்ந்த ஜெயப்பிரகாஷ்(21) என்று தெரிந்தது. இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story