தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 862 வழக்குகளுக்கு தீர்வு
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 862 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.6¾ கோடி வசூல் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 862 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.6¾ கோடி வசூல் செய்யப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் சமரச தீர்வு காண்பதற்கு தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சாந்தி தலைமை தாங்கினார். இதில் தலைமை குற்றவியல் நீதிபதி பாலமுருகன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாரும், சார்பு நீதிபதியுமான சரண்யா, குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரெகுபதி ராஜா, குற்றவியல் கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி சிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
862 வழக்குகளுக்கு தீர்வு
இதேபோல் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் நன்னிலம் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் சமரசத்திற்குரிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவானம்சம் உள்பட 1,950 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. அதில் 862 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.6 கோடியே 86 லட்சத்து 64 ஆயிரத்து 911 வசூல் செய்யப்பட்டது.