சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில்மருத்துவக் குழு வாகனத்தில் யு.பி.எஸ்., பேட்டரிகள் திருட்டு


சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில்மருத்துவக் குழு வாகனத்தில் யு.பி.எஸ்., பேட்டரிகள் திருட்டு
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் மருத்துக் குழு வாகனத்தில் யு.பி.எஸ்., பேட்டரிகள் திருடுபோனது.

தேனி

தேனி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கட்டுப்பாட்டில் நடமாடும் மருத்துவக் குழு உள்ளது. இந்த குழுவுக்கு நடமாடும் மருத்துவ வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் டிரைவராக செழியன் உள்ளார். அவர் கடந்த 10-ந்தேதி வாகனத்தை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி விட்டு பணி முடிந்து வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் அந்த அலுவலக தூய்மை பணியாளர் கமல்நாத், நடமாடும் மருத்துவ குழு வாகனத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒரு யு.பி.எஸ்., 2 பேட்டரிகள் திருடுபோய் இருந்தன. இதுகுறித்து அவர், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜாவிடம் தகவல் தெரிவித்தார். அவர் இதுதொடர்பாக அலுவலக பணியாளர்களிடம் விசாரித்தார். ஆனால் யு.பி.எஸ். மற்றும் பேட்டரியை திருடியது யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து அவர் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தனர். பேட்டரி திருடியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story