'ஒரே நாடு ஒரே உரம்' திட்டத்தில் 2-வது முறையாக ஈரோட்டிற்கு 1,060 டன் யூரியா உரம் வந்தது


ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தில்  2-வது முறையாக ஈரோட்டிற்கு   1,060 டன் யூரியா உரம் வந்தது
x
தினத்தந்தி 17 Dec 2022 1:00 AM IST (Updated: 17 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தில்

ஈரோடு

ஈரோடு மாவட்ட பாசனத்துக்காக தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்களிலும் சம்பா பாசனத்துக்கு கீழ்பவானி, மேட்டூர் வலது கரை கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடி பணி மேற்கொண்டுள்ளனர். மேலும் கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, நிலக்கடலை, மக்காச்சோளம் போன்ற பயிர்களும் பயிர் செய்துள்ளனர். இந்த நிலையில், 'ஒரே நாடு ஒரே உரம்' திட்டத்தில், 2-வது முறையாக பாரத் யூரியா உரம், சென்னை எம்.எப்.எல். நிறுவனம் மூலம் 1,060 டன் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது 4 ஆயிரத்து 765 டன் யூரியா உரமும், 1,914 டன் டி.ஏ.பி. உரமும், 1,205 டன் பொட்டாஷ் உரமும், 10 ஆயிரத்து 877 டன் காம்ப்ளக்ஸ் உரமும், 818 டன் சூப்பர் பாஸ்பேட் உரமும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், தனியார் உர கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த உரங்களை அதிகப்பட்ச விற்பனை விலை, இருப்பு விவரங்களை விலை பலகையில் எழுதி, கடை முன் வைத்திருக்க வேண்டும். உரம் விற்பனை தொடர்பான புகார்களை, அந்தந்த பகுதி வேளாண் உதவி இயக்குனர்களிடம் விவசாயிகள் தெரிவிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி தெரிவித்து உள்ளார்.


Next Story