கடைகளில் நடந்த சோதனையில்2¼ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


கடைகளில் நடந்த சோதனையில்2¼ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

நாமக்கல்லில் உள்ள கடைகளில் நடந்த சோதனையில் 2¼ கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்

திடீர் சோதனை

நாமக்கல்லில் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்து இருந்தது. அதன் எதிரொலியாக நாமக்கல் பஸ் நிலையம், சேந்தமங்கலம் சாலை மற்றும் சேலம் சாலைகளில் உள்ள கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூகப் பணியாளர்கள் மணிகண்டன், கிஷோர், சுகாதார துறையின் மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூகப் பணியாளர் ராஜ்கமல், சைல்ட் லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு மற்றும் நாமக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

2¼ கிலோ புகையிலை பறிமுதல்

இதில் 15-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 6 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ 320 கிராம் எடை கொண்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story