போடியில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா


போடியில்  ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா
x

போடியில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

தேனி

போடி நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு நகர தலைவர் முசாக் மந்திரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சன்னாசி, நகர பொதுச்செயலாளர் அரசகுமார், நகரச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், காந்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அதுபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் தர்மர், வள்ளுவர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகர துணை தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் போஸ், விவசாய அணி தலைவர் ஜெயக்கொடி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


Next Story