போடியில் பழைய இரும்பு கடையில் திருட்டு


போடியில்  பழைய இரும்பு கடையில் திருட்டு
x

போடியில் பழை இரும்பு கடைக்குள் புகுந்து மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

தேனி

போடியில், மூணாறு செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை பின்புறம் அம்மாக்குளம் பகுதியை சேர்ந்த சையது என்பவர் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். நேற்று இரவு இவர், கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று மதியம் 12 மணி அளவில் அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் ஹார்டு டிஸ்க் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.10 ஆயிரம் திருடு போய் இருந்தது. இதுகுறித்து சையது போடி நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story