உடன்குடி பகுதியில் நீர்ப்பிடிப்பு குளங்களை முழுமையாக நிரப்பி விவசாய நிலங்களை பாதுகாக்க கிராம மக்கள் கோரிக்கை


உடன்குடி பகுதியில் நீர்ப்பிடிப்பு குளங்களை முழுமையாக நிரப்பி விவசாய நிலங்களை பாதுகாக்க கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Sep 2023 6:45 PM GMT (Updated: 10 Sep 2023 6:46 PM GMT)

உடன்குடி பகுதியில் நீர்ப்பிடிப்பு குளங்களை முழுமையாக நிரப்பி விவசாய நிலங்களை பாதுகாக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

வரும் மழைக்காலத்தில் அனைத்து நீர்ப்பிடிப்பு குளங்களையும் முழுமையாக நிரப்பி விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் வேண்டும் என கிராம மக்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

உடன்குடி பொது நலக்குழு மற்றும் ஊர் கூடி ஊரை காப்போம் ஆகிய அமைப்பின் சார்பில் உடன்குடி கொட்டங்காடு அரசு பள்ளி வளாகத்தில் நேற்று பல்வேறு கிராம மக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ்ரூபஸ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாய சங்க தலைவர் சந்திரசேகர், மாவட்ட பம்பு செட்டு விவசாய சங்கத் செயலர் ஆறுமுக பாண்டி, குலசை சங்கரன், தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்க அமைப்பாளர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீதத்தாபுரம் வைரவராஜ், உதிரமாடன்குடியிருப்பு கணேசன், கொட்டங்காடு சந்திரசேகர், செந்தில், உடன்குடி ஷேக் முகமது, சமூக ஆர்வலர் அசோக் சுப்பையா, மணப்பாடு வினோஜுன், சிவலூர் முருகேசன், தண்டுபத்து சுயம்பு உட்பட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், உடன்குடி கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் ஆகியோர் அரசு சார்பில் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ராக்கெட் ஏவுதளம் விரிவாக்கம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களது கோரிக்கை எதுவாக இருந்தாலும் போராட்டம் நடத்தாமல் மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிடுங்கள் என்று கூறிவிட்டு சென்றனர்.

தீர்மானம்

உடன்குடி பகுதியில் உள்ள ஒரு சில நீர்ப்பிடிப்பு குளங்களை கழிவு சாம்பல் கொட்டும் குளமாக மாற்றியதை இக்கூட்டம் கண்டிக்கிறது. வருகின்ற அக்டோபர் 29-ந் தேதி உடன்குடி பஜாரில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, வரும் மழை காலத்தில் அனைத்து நீர்ப்பிடிப்பு குளங்களையும் இந்த ஆண்டு முழுமையாக நிரப்பி விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story