உடன்குடி பகுதியில்33 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை


உடன்குடி பகுதியில்33 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:46 PM GMT)

உடன்குடி பகுதியில் 33 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி ஒன்றிய இந்து முன்னனி சார்பில் உடன்குடி மெயினபஜார் பெருமாள்புரம், வைத்திலிங்கபுரம், சந்தையடியூர், கொட்டங்காடு, சோமநாதபுரம், சிவலூர், காலன்குடியிருப்பு, பரமன்குறிச்சி, தைக்காவூர் உட்பட 33 இடங்களில் விநாயகர் சிலைகள் கடந்த 18-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தினமும் சிறப்பு பூஜைகளும் பல்வேறு நிகழ்சிகள் நடந்து வந்தன. உடன்குடி பஜாரில் நடைபெற்ற விநாயகர் ஆகவல் ஒப்புவித்தல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் புத்தகப்பை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று(புதன்கிழமை) மாலை 4 மணிக்கு உடன்குடி பஜார் சந்திப்பு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருச்செந்தூர் கடலில் கரைக்கப்படும் என்று இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளனர். இதை முன்னிட்டு உடன்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story