கட்டாலங்குளம், சத்திரப்பட்டி கிராமங்களில்ரூ.8.70 லட்சத்தில் திட்ட பணிகள் தொடக்கம்


கட்டாலங்குளம், சத்திரப்பட்டி கிராமங்களில்ரூ.8.70 லட்சத்தில் திட்ட பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கட்டாலங்குளம், சத்திரப்பட்டி கிராமங்களில் ரூ.8.70 லட்சத்தில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு யூனியன் கட்டாலங்குளம் பஞ்சாயத்தில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணிக்கு மாவட்ட கவுன்சிலர் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு கட்டாலங்குளம் பஞ்சாயத்து தலைவர் தம்பா என்ற சேசுபாலன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து துணை தலைவர் மாரியம்மாள் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் கள் ஐயப்பன் மற்றும் மகளிர் குழு உறுப்பினர், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அகிலாண்டபுரம் பஞ்சாயத்து சத்திரப்பட்டி கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை குழாய் அமைத்து, குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்து மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகளை மாவட்ட கவுன்சிலர் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பன்னீர் குளம் பஞ்சாயத்து துணை தலைவர் பொன்னுச்சாமி பாண்டியன், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் ஜெபசிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story