வேளாண் விரிவாக்க மைய கிட்டங்கியில் உரம், விதைகள் இருப்பு விவரங்களை கலெக்டர் ஆய்வு


வேளாண் விரிவாக்க மைய கிட்டங்கியில்  உரம், விதைகள் இருப்பு விவரங்களை கலெக்டர் ஆய்வு
x

ெபரியகுளம் அருகே வேளாண் விரிவாக்க மைய கிட்டங்கியில் உரம், விதைகள் இருப்பு விவரங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்

தேனி

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் செயல்படும் வேளாண்மை விரிவாக்க மைய கிட்டங்கியில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அங்கு உரம், விதைகள் இருப்பு விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உரங்கள், விதைகளை தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு கொடுக்கவும், இதன் விற்பனையில் முறைகேடுகள் எதுவும் நடக்காமல் கண்காணிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். முன்னதாக பெரியகுளம் கால்நடை மருத்துவமனை, மேல்மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்து, அங்கிருந்த அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story