காட்டு மன்னார்கோவில் அனந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்


காட்டு மன்னார்கோவில்  அனந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்
x

காட்டுமன்னார்கோவில் அனந்தீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

கடலூர்

காட்டுமன்னார்கோவில்

அனந்தீஸ்வரர் கோவில்

காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் பிரசித்தி பெற்ற சவுந்தரநாயகி உடனுறை அனந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து தினந்தோறும் சவுந்தரநாயகி உடனுறை அனந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இரவில் பூதவாகனம், காமதேனு வாகனம், ரிஷபவாகனம், யானை வாகனம், கயிலாய வாகனம் என பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து 9-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உற்சவர் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், சவுந்தரநாயகி உடனுறை அனந்தீஸ்வரர், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு காலை 8 மணியளவில் தனித்தனியாக 5 தேர்களில் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்ததும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் அருகே நிலையை அடைந்தது. இதில் உடையார்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர். விழாவையொட்டி சிவனடியார்கள் தொடர்ந்து 10 நாட்கள் சாமி வீதி உலாவுடன் பன்னிரு திருமுறைகளை பாடிவந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில்நிர்வாகிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


Next Story