தேனி அல்லிநகரத்தில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும்: தமிழ்ப்புலிகள் கட்சியினர் மனு
ேதனி அல்லிநகரத்தில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என தமிழ்ப்புலிகள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் நகர செயலாளர் வெற்றிவேல் தலைமையில் நிர்வாகிகள் சிலர் வந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், "தேனி அல்லிநகரத்தில் டாஸ்மாக் மதுக்கடை மக்கள் எதிர்ப்பால் அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், மக்களிடம் சாதி பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அங்கிருந்து அகற்ற வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story