தேனி மாவட்டத்தில்கோவில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு:ஏராளமான பக்தர்கள் தரிசனம்


தேனி மாவட்டத்தில்கோவில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு:ஏராளமான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 6 Jan 2023 6:45 PM GMT (Updated: 6 Jan 2023 6:47 PM GMT)

தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தேனி

ஆருத்ரா தரிசனம்

தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடந்தது. அதன்படி, போடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் சிவ பெருமானுக்கு அதிகாலை 4 மணிக்கு 151 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு ருத்ராட்சங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி போடி நகர் முக்கிய சாலைகளில் நகர் வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனர்.

சிறப்பு அலங்காரம்

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் இருந்து உற்சவர் நகர் பகுதியில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதேபோல், பெரியகுளம் தென்கரை காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து நடராஜர், சிவகாமி அம்மாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர். ஆருத்ரா தரிசனத்தையொட்டி கோவில்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் தரிசனம்

சில்வார்பட்டியில் முளையடுவ நாயனார் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், கோ பூஜை நடந்தது. பின்னர் காசி விசுவநாதர் விசாலாட்சி மாணிக்கவாசகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர் சப்பரத்தில் முக்கிய வீதிகளில் வழியாக உலா வந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story