தேனி மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு-ஆர்ப்பாட்டம்


தேனி மாவட்டத்தில்  வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு-ஆர்ப்பாட்டம்
x

தேனி மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

கும்பகோணத்தை சேர்ந்த வக்கீல் சுவாமிநாதன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் முடிவின்படி, தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி, உத்தமபாளையம் கோர்ட்டுகளில் வக்கீல்கள் இன்று பணியை புறக்கணித்தனர்.

மேலும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு தேனி வக்கீல் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வக்குமார், முன்னாள் தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story