தேனி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேவை திடீர் முடக்கம்


தேனி மாவட்டத்தில்  தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேவை திடீர் முடக்கம்
x

தேனி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேவை திடீரென முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பரிதவித்தனர்

தேனி

தேனி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் கிளை தேனி, பழனிசெட்டிபட்டி உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் உள்ளது. இந்த வங்கி கிளைகளில் இன்று பகல் 1.30 மணியளவில் வங்கி சேவை திடீரென முடங்கியது. வங்கியின் பணப்பரிமாற்றம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. அந்த வங்கியின் ஏ.டி.எம். மையங்கள், பணம் செலுத்தும் எந்திரங்களும் செயல்படவில்லை.

மாலை வரை இதே நிலைமை நீடித்தது. இதனால், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாமலும், வங்கிக்கு நேரில் வந்தும் பரிவர்த்தனைகள் செய்ய முடியாமலும் வாடிக்கையாளர்கள் பரிதவித்தனர்.

பின்னர், மாலை 5.30 மணியளவில் நிலைமை சீரானது. அதைத்தொடர்ந்து ஏ.டி.எம். மையங்களும் செயல்படத் தொடங்கின. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அலுவலர்கள் தரப்பில் கேட்டபோது, "தேனி மட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களில் வங்கி சேவை திடீரென முடங்கியது. வங்கியின் பிரதான இணையவழி இணைப்பில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், வங்கியின் நேரடி மற்றும் இணையவழி பரிவர்த்தனைகள் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது" என்றனர்.


Next Story