திருவாரூரில், 1½ கிலோ ஒட்டு மாம்பழம் ரூ.100-க்கு விற்பனை


திருவாரூரில், 1½ கிலோ ஒட்டு மாம்பழம் ரூ.100-க்கு விற்பனை
x

திருவாரூரில், 1½ கிலோ ஒட்டு மாம்பழம் ரூ.100-க்கு விற்பனை

திருவாரூர்

சீசன் தொடங்கியதால் திருவாரூரில், 1½ கிலோ ஒட்டு மாம்பழம் ரூ.100-க்கு விற்பனையானது.

முக்கனியில் முதன்மையானது

முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து உண்ணக்கூடிய இந்த மாம்பழத்தில் மல்கோவா, பாதாமி, ரசபுரி உள்பட பல்வேறு வகைகள் உள்ளன. இந்த ஒவ்வொரு வகை மாம்பழத்திலும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் எத்தகைய சூழ்நிலையிலும் மாமரம் வளரும். மார்ச் மாதம் மாம்பழ சீசன் தொடங்கும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாமரம் பயிரிடப்பட்டுள்ளது.

இவை வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு சரியாக மழை பெய்யாததால் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் மைசூரு மார்க்கெட்டுக்கு வர வேண்டிய மாம்பழங்கள் ஒரு மாதம் தாமதமாக மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

1½ கிலோ ஒட்டு மாம்பழம் ரூ.100

மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் திருவாரூர் கடைவீதியில் மாம்பழங்கள் விற்பனைக்காக குவிய தொடங்கி உள்ளன. திருவாரூரில் சாலையோரம், தள்ளுவண்டி கடைகளில் பல வகையான மாம்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மாம்பழ சீசன் தொடங்கியதால் திருவாரூரில் மாம்பழத்தின் விற்பனை மும்முரமாக நடக்கிறது. 1½ கிலோ ஒட்டு மாம்பழம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. செந்திரா, பங்கன பள்ளி உள்ளிட்ட மாம்பழங்கள் 1 கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

ரகத்திற்கு ஏற்பட விலை நிர்ணயம்

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகளவில் மாங்காய் விளைச்சல் இருக்கும். தற்போது மாம்பழ சீசன் தொடங்கியதால் திருவாரூருக்கு பல்வேறு இடங்களில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்காக கொண்டுவந்துள்ளோம். மாம்பழத்தின் ரகத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும். கடந்த ஆண்டை விட விலை சற்று அதிகம் தான். ஆனால் தொடர்ந்து வரத்து அதிகரித்தால் விலை குறைய தொடங்கிவிடும் என்றனர்.


Next Story