திருவாரூரில், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பருத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து திருவாரூரில், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பருத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து திருவாரூரில், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் நல சங்க தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். டெல்டா விவசாயிகள் குழும பொதுச்செயலாளர் சத்தியநாராயணன், தமிழக விவசாயிகள் கூட்டியக்க செயலாளர் அழகர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாயிகள் நல சங்கம் செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். இதில் விவசாயிகள் சல சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டார் கலந்து கொண்டனர்.
மயங்கி விழுந்த விவசாயி
இந்திய விவசாய விளை பொருள் நிர்ணய ஆணையத்தால் இதுவரை பருத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்படாததை கண்டித்தும், கோடை மழையால் சேதம் அடைந்த பருத்தி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் போது வெயில் சுட்டெரித்தால் விவசாயி ஒருவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த போலீசார், அவரை அங்கிருந்து அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.