தூத்துக்குடியில், வியாழக்கிழமை அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தூத்துக்குடியில், வியாழக்கிழமை அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், வியாழக்கிழமை அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக ஆட்சியின் சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்கட்ட சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகேயும், நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலிலும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டங்களில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, சரத்பாலா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். கூட்டத்தில் மாவட்ட, மாநகர, நகர கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story