தூத்துக்குடி மாநகராட்சியில்சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம்:ஆணையாளர் தினேஷ்குமார் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என்று ஆணையாளர் தினேஷ்குமார் தகவல்
தூத்துக்குடியில், இந்த ஆண்டுக்கான அரையாண்டு சொத்து வரியை அடுத்த மாதம் 30-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை பெறலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சொத்துவரி
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் 2023 பிரிவு 268-ன் படி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி முதல் அரையாண்டு ஏப். 1-ந் தேதி முதல் செப்.30-ந் தேதி வரையும், 2-வது அரையாண்டு அக். 1-ந் தேதி முதல் மார்ச் 31-ந் தேதிக்குள்ளும் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு உரிய காலத்தில் செலுத்தப்படாவிட்டால் அரையாண்டு சொத்துவரி செலுத்தப்படும் வரை ஒவ்வொரு மாதமும், ஒரு சதவீதம் வட்டி விதிக்க வேண்டும் எனவும், அரையாண்டுகளுக்கான சொத்துவரி அரையாண்டு தொடங்கிய நாளில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்பட்டால் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஊக்கத்தொகை
அதன்படி 2023-24 நடப்பு முதல் அரையாண்டு சொத்து வரியை வருகிற செப்.30-ந் தேதிக்குள் செலுத்தி வட்டி விதிக்கப்படுவதை தவிர்க்குமாறும், 2-வது அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்று பொதுமக்கள் பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.